நீங்க phonepe உபயோகிப்பவரா - இனிமேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூல்

user recharge PhonePe fine deduct
By Anupriyamkumaresan Oct 26, 2021 07:07 AM GMT
Report

இனி போன்பே செயலி வழியாக ரீசார்ஜ் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கரன்சி இல்லா பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதையொட்டி மக்கள் நேரடியாக வங்கிகள் மூலம் மட்டுமின்றி பல மொபைல் செயலிகள் மூலமும் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இவற்றில் போன்பே என்னும் செயலியும் ஒன்றாகும்.

நீங்க phonepe உபயோகிப்பவரா - இனிமேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூல் | Here After Phonepe Use For Recharge Fine Deduct

இந்த செயலிகள் மூலம் மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம், ரீசார்ஜுகள் என பல பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இதுவரை இவாறு ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் வ்சூலிக்கப்படுவது இல்லை. எனவே மக்கள் இந்த செயலிகள் மூலமே ரீசார்ஜ் செய்து வந்தனர்.

நீங்க phonepe உபயோகிப்பவரா - இனிமேல் ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூல் | Here After Phonepe Use For Recharge Fine Deduct

இந்நிலையில் இனி போன்பே மூலம் ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.1 சேவைக் கட்டணமாகவும், ரூ100-க்கு மேல் ரீசார்ஜ்களுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.