இனி குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை - அரசு அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் இனி திருமண நாள், பிறந்த நாள் மாதிரியான வாழ்வின் முக்கிய கொண்டாட்ட நாட்களில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் என யாரும் குழந்தை காப்பகத்தில் கொண்டாடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

திருமண நாள், பிறந்த நாள் மாதிரியான நாட்களில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் குழந்தைகள் நல காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடைவிதித்துள்ளது கர்நாடக அரசு. இந்த தடை அக்டோபர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி நபர்கள் தங்கள் பிறந்தநாளை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடும்போது அவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகிறது.

அதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படலாம் என்ற நோக்கத்தில் இந்த தடையை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்