வளர்ப்பு நாய்களுக்கு வாய்க்கவசம் கட்டாயம் - வெளியான அதிரடி அறிவிப்பு!
Tamil nadu
Greater Chennai Corporation
By Vidhya Senthil
சென்னையில் வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது வாய்க்கவசம் அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
நாய் வளர்ப்போருக்கான விதி:
- நாய் வளர்ப்போர் தங்கள் நாய்களை சாலையில் அழைத்துச்செல்லும்போது வாயை மூடும் வகையிலான கவசம் அணிவிக்க வேண்டும்.
- நாய்கள் வளர்ப்போர் அதற்கான உரிமம் பெற்றிருப்பதும் கட்டாயம்.'
- ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
- வளர்ப்பு நாய் ஒருவரை கடித்தால் அதற்கு உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும்.
இதனை மீறும்பட்சத்தில் நாயின் உரிமையாளருக்கு ரூ.1000த்துக்கு மேல் அபராதம் வசூலிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.