போதையில் கார் ஓட்டி செல்லும் நபர்கள் மீதும் வழக்கு தொடரலாம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamil nadu
By Irumporai Aug 05, 2022 08:57 AM GMT
Report

போதையில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் செல்பவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார் மோதி உயிரிழப்பு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் மதுபோதையில் அன்பு சூர்யா என்பவர் ஓட்டிய கார் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

போதையில் கார் ஓட்டி செல்லும் நபர்கள் மீதும் வழக்கு தொடரலாம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Hennai High Court Order Drunken Drive

இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவருடன் காரில் பயணம் செய்த பெண் மருத்துவர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆனால் இந்த கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணம் செய்பவர்களுக்கும் விபத்தில் சமமான பொறுப்பு உள்ளது என்று கூறியது.

ஆகவே மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணம் செய்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.