முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் கோழி - ரொனால்டோவுக்கே டஃப் கொடுக்கும் வைரல் வீடியோ

viralvideo christianoronaldo henvideos henplayswithegg
By Swetha Subash Apr 18, 2022 10:41 AM GMT
Report

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

வீடியோவில் கோழி ஒன்று கால்பந்தாட்ட வீரர்களை போல் முட்டையை தனது கால்களால் உருட்டி, கால்பந்தாட்ட வீரர்களைப் போல துள்ளி விளையாடுகிறது.

அந்த கோழி முட்டையை அதன் முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் முட்டையை உருட்டுவது போல் எடிட் செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருபவர்கள்,

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கே இந்த கோழி டஃப் கொடுத்துவிடும் போல என்பது போல் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

மேலும், இந்த வீடியோ நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டுள்ள போதிலும் இதை திறம்பட எடிட் செய்த நபருக்கு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.