தர்மேந்திரா நலமுடன் உள்ளார் - கொதித்து எழுந்த ஹேமமாலினி!

Bollywood Dharmendra
By Sumathi Nov 11, 2025 01:17 PM GMT
Report

நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

நடிகர் தர்மேந்திரா

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது மனைவியும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி அதனை மறுத்துள்ளார்.

தர்மேந்திரா நலமுடன் உள்ளார் - கொதித்து எழுந்த ஹேமமாலினி! | Hemamalini Slams Media False Info About Dharmendra

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இங்கே நடப்பவை மன்னிக்க முடியாதது. பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படி இத்தகைய தவறான செய்திகளை வெளியிட முடியும். ஒருவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுவரும் போது இப்படியான செய்திகளை வெளியிடுவதா?

கார் குண்டு வெடிப்பு; ஒலிக்கும் மரண ஓலம் - தமிழகத்திலும் உஷார்!

கார் குண்டு வெடிப்பு; ஒலிக்கும் மரண ஓலம் - தமிழகத்திலும் உஷார்!

கொதித்த மனைவி 

இது அவமதிப்பு மட்டுமல்ல; பொறுப்பின்மையும் கூட. தயைகூர்ந்து எங்கள் குடும்பத்துக்கு உரிய மரியாதையும், இப்போதைக்கு தனிமையையும் கொடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களது மகள் இஷா,“ஊடகங்கள் பரபரப்பில் உள்ளன.

தர்மேந்திரா நலமுடன் உள்ளார் - கொதித்து எழுந்த ஹேமமாலினி! | Hemamalini Slams Media False Info About Dharmendra

அதனால், தவறான செய்திகளைப் பரப்புகின்றன. எனது தந்தை நலமுடன் உள்ளார். வேகமாக உடல்நிலை தேறி வருகிறது. அவரது நலனுக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. தயவுசெய்து எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சம் தனிமையைக் கொடுங்கள்.” என்று விளாசியுள்ளார்.

90 வயதான நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.