நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Kerala Actors Actress
By Karthikraja Aug 19, 2024 04:30 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

மலையாள சினிமா துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த புகாரை விசாரித்த ஹேமா ஆணையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹேமா ஆணையம்

கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது, நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 9 பேர் கைதாகினர்.  

malayala actor dilip kumar

மேலும் பல்வேறு நடிகைகள் நடிகர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்து அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கேரள அரசு நியமித்தது.

பார்வதி நாயர்

இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட நடிகைகள் உள்பட பல பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தி 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கையில் பல ரகசியங்கள் இருப்பதால் இதை வெளியிடாமல் கேரள அரசு காலம் தாழ்த்துவதாக நடிகை பார்வதி நாயர் குற்றம் சாட்டினார். இந்த அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டுமென பிரபல மலையாள தயாரிப்பாளர் சஜிமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சில தினங்களுக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது கேரள உயர்நீதிமன்றம். 

hema commission report

இந்த நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு பரவியுள்ளது. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

பரிந்துரைகள்

அவர்களுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட மாஃபியா கும்பல் மலையாள திரையுலகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள். நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட பட்டியலில் முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். இயக்குநர்கள் மீதே அதிக புகார்கள் இருக்கிறது. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

நடிகைகள் பயம் காரணமாக பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்கிறார்கள். ஆண்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயற்சிப்பது உட்பட பல துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் இருந்தபோதிலும், பின்விளைவுகள், களங்கம் மற்றும் பொது ஏளனத்தின் காரணமாக நடிகைகள் புகாரளிக்கத் தயங்குகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “நடிகர் நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம் மற்றும் போக்குவரத்தை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மதுபானம் போன்ற போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என பரிந்துரைக்கப் பட்டுள்ளது.