ரஷ்யா-உக்ரைன் போர் : உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

helplinenumberindiansinukraine delhihelplinenumberukrain
By Swetha Subash Feb 24, 2022 07:22 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

எந்த நேரத்திலும் ரஷ்யா போர்தொடுக்கலாம் என உக்ரைன் கூறி வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைனின் 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது பல்முனை தாக்குதளை நடத்தி வருகிறது.

உக்ரைன் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதலை தொடங்கி நடத்திவருகிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் : உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு | Helpline Number Announced For Indians In Ukraine

ஓடேசா, மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் தாக்கி வருகிறது.

மேலும், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அதிபர் புதின் பிற நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும்; இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் என ஐநா பொதுச்செயலாளரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் : உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு | Helpline Number Announced For Indians In Ukraine

மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியர்கள் உதவிக்கு 1800118797 என்ற எண்ணில் டெல்லியிலுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதைபோல் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +91 11 23012113 +91 11 23014104 +91 11 23017905 ஆகிய எண்களை இந்திய மக்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தல்.