பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan May 21, 2022 07:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயமென சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த  2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ய்ப்பட்டது. இதில்  இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.

இவர்களில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த ஜனவரி மாதம் 1 ம்ஆ தேதி முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் இருச்சக்கர வாகன விபத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 80 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற திங்கட்கிழமை (மே 23) முதல் இருசக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவித்தார்.

மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் நபர்கள் என இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.