4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் : அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை

helmetcompulsory children4year safetyruleindia
By Irumporai Feb 16, 2022 10:24 AM GMT
Report

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோருக்கு அவ்வப்போது புதிய சாலை விதிகளை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிவித்து வருகிறது. அந்தவகையில் தற்போது சில புதிய விதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி இனிமேல் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மேட் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று புதிய கட்டுப்பாடும் விதிகப்பட்டுள்ளது.இந்த விதிகள் அனைத்தும் வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.