“மும்பையில் பங்கேற்க திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து” - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

india breaking helicopter crash new announcement bipin rawat army chief ramnath govind
By Fathima Dec 08, 2021 12:30 PM GMT
Report

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் உள்பட பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடைப்பெற்றதை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மும்பையில் பங்கேற்க திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.