காற்றில் தரையிறங்க முடியாமல் திணறிய எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர்... - பதற வைக்கும் வீடியோ வைரல்...!

Viral Video Karnataka
By Nandhini Mar 06, 2023 10:15 AM GMT
Report

காற்றில் தரையிறங்க முடியாமல் எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் திணறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திணறிய எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

கர்நாடகா மாநிலம், கலபுர்கி, ஜெவர்கியில் உள்ள ஹெலிபேடில், முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஹெலிகாப்டரிலிருந்து தரையிரங்கும் போது பலத்த காற்றால் பிளாஸ்டிக் பொருட்கள் பறந்ததால் ஹெலிகாப்டர் தரையிறங்காமல் திணறியது.

இதனையடுத்து, தரையிறங்க முடியாமல் மீண்டும் ஹெலிகாப்டர் மேலே சென்றது. இதன் பிறகு, அங்கிருந்த பிளாஸ்டிப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக ஹேலிகாப்டர் தரையிறங்கப்பட்டது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் சற்று நேரம் பதறியதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.   

helicopter-yediyurappa-karnataka-garbage