ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபார விவசாயி- குவியும் பாராட்டு

punjab rajasthan Businessman
By Jon Feb 16, 2021 03:28 PM GMT
Report

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்த்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தன் போயிர். இவர் ஒரு விவசாயி மட்டுமல்லாமல், அவர் வணிக தொழில் செய்து வருகிறார். விவசாயிகள் பலர் எளிமையான வாழ்க்கைய வாழ்ந்து வந்தாலும் ஜனார்த்தன் தான் உழைத்து முன்னேறிய பணத்தை வைத்து தற்பொழுது ரூ. 30 கோடி ரூபாய் செலவில் ஒரு ஹெலிகாப்டரை வாங்கி இருக்கிறார்.

இவர் விவசாயம் மட்டுமல்லாமல் பால் வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியில் உள்ள தொழில் முனைவோர்களில் முக்கியமான ஒருவராக ஜனார்தன் அடிக்கடி ராஜஸ்தான், பஞ்சாப் குஜராத், ஹரியானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்து வந்தாராம்.

தனது பயணத்திற்கும் பால் வியாபாரத்திற்கும் உதவியாக இருக்கும் என்பதற்காக தனது வீட்டிற்கு அருகே இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஹெலிகாப்டர் நிறுத்துவதற்கான இடம், பைலட் அறை மற்றும் தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்து தற்பொழுது ரூ. 30 கோடி செலவில் ஒரு ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கி இருக்கிறார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.30 கோடி செலவில் ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபார விவசாயி- குவியும் பாராட்டு | Helicopter Milk Farmer Congrats

இதுகுறித்து அவர் பேசுகையில், எனது மனித பயன்பாட்டிற்காக நான் வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால், இந்த ஹெலிகாப்டரை வாங்கியிருக்கிறேன். எனது வணிக வியாபாரத்தை போலவே எனது பால் வியாபாரத்தையும் கவனித்துக் கொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

விவசாயி ஒருவர் இவ்வளவு செலவில் ஹெலிகாப்டர் வாங்கி இருப்பது பலரது பாராட்டைப் பெற்றதோடு அல்லாமல், பால் வியாபாரத்திற்கும் தனது ஹெலிகாப்டரை பயன்படுத்தப்போவதாக கூறியதை அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.