ஹெலிகாப்டர் வேண்டும் என குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய பெண்!
மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய பன்ணை நிலத்திற்கு செல்ல ஹெலிகாப்டர் வேண்டும் என ஒரு பெண் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அகர் கிராமத்தைச் சேர்ந்த பாசந்தி பாய் லோகர். தன்னுடைய பண்ணை நிலத்திற்குச் செல்வதற்கு ஹெலிகாப்டர் வேண்டும் எனவும் அதை வாங்க கடன் வழங்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில் எனக்குச் சொந்தமாக சிறிது பண்ணை நிலம் உள்ளது அதில் விவசாயம் செய்து தான் பிழைப்பு நடத்திவருகிறேன். ஆகவே தற்போது அந்த நிலத்துக்குச் செல்லும் இரு சாலை வழிகளை பர்மானந்த் பதிதார் என்ற நபரும் அவரின் இரு மகன்களும் மறித்து அடாவடி செய்கிறார்கள்.
இதனால் என்னால் என்னுடைய நிலத்துக்குச் செல்ல முடியவில்லை.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை ஆகவே நீங்கள் எனக்கு உதவுங்கள். சாலை வழியாகச் செல்ல முடியாததால் ஹெலிஹாப்டர் இருந்தால் என் நிலத்துக்குச் சென்றுவிடுவேன். அது வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.
அதற்கு வங்கியில் கடன் வழங்க உத்தரவிடுங்கள். பறப்பதற்கான உரிமத்தையும் வாங்கி கொடுங்கள். விவசாயம் மேற்கொள்ள விவசாயக் கருவிகளையும் எனக்கு கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் வசிக்கும் மாண்ட்சர் மாவட்ட எம்எல்ஏவின் காதுக்கும் தகவல் எட்டியுள்ளது.
இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், பாசந்திக்கு உதவ முன்வருவதாக உறுதியளித்துள்ளார். அவருக்குக் கட்டாயம் உதவுவேன். ஆனால் என்னால் ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.