தரையில் விழுந்து வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் - ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு..!
சிலி நாட்டில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியதில் ராணுவ வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணுவ பயிற்சி
தென் அமெரிக்கா நாடான சிலியின் தெற்கே லாஸ் லகோஸ் நகரம் அமைந்துள்ளது.இங்கு ராணுவத்திற்கு சொந்தமான விமான படை தளம் ஒன்று அமைந்துள்ளது.
இங்கு வழக்கம் போல் ராணுவ வீரர்கள் நேற்று இரவு நேர பயிற்சிக்காக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது வானில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் - 5 பேர் உயிரிழப்பு
இதனால் ஹெலிகாப்டரை உடனடியாக தரை இறக்க விமானி முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அதிவேகமாக தரையில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 விமானிகள், 2 விமானப்படை வீரர்கள் மற்றும் சிறப்புப்படை வீரர் ஒருவர் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.