ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி விபத்து - இரண்டு விமானிகள் உயிரிழப்பு..!
Chhattisgarh
By Thahir
சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் கிருஷ்ண பாண்டா,ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகோயர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல்,உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது.