குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

helicopter-crash-samugam
By Nandhini Dec 08, 2021 10:02 AM GMT
Report

குன்னூர் அருகே ராணுவ ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான மேக மூட்டம் காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து, இந்த விபத்தில் 10 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பிபின் ராவத் பயணம் செய்த இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து தரையிறங்குவதற்கு 10 கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்துள்ளது.

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்திருக்கிறார். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்போதைய பெரும் கேள்வியாக இருக்கிறது. குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. விமான பெட்ரோல் என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.