சட்டென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் - 6 பேர் உடல் கருகி பலி
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
குஜராத், அகமதாபாத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்ட் கங்கனானி பள்ளத்தாக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த விமானத்தில் 6 பயணிகளும் ஒரு கேப்டனும் பயணித்த நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு நிவாரணக் குழுக்கள் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6 பேர் பலி
இச்சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் சார்தாம் யாத்திரை என்று சொல்லக்கூடிய பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கான பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஈடுபட்டிருந்தது. அப்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் ஏரோ டிரான்ஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெல் 407 வி.டி. - ஓ.எக்ஸ்.எஃப். ஹெலிகாப்டர் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 6 பேருக்கும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
