இதனால் தான் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்தேன்.! கமல்ஹாசன் விளக்கம்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஹெலிகாப்டர் இறங்க முடியாத காரணத்தினால் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. கமல்ஹாசன் ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் இன்று பதிலளித்துள்ளார், “மிக விரைவாக பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் தான் ஹெலிகாப்டரில் செல்கிறேன். எங்கள் கூட்டணியின் 234 வேட்பாளர்களையும் அனைவருக்கும் தெரியாது. அவர்களின் முகமாக நான் தான் இருக்கிறேன்.
அதனால் தான் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டி உள்ளது” என்றார்.
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.