ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்களுக்கு டெல்லியில் நாளை இறுதி மரியாதை
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 முக்கிய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் ஒரு வீரர் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள டுவீட்டில்,
‘துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்’என தெறிவித்திருக்கிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற விமானப்படை வீரர்களுக்கு நாளை டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.