Viral Video : நாகாலாந்தில் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு...!

India Nagaland
By Nandhini Mar 02, 2023 10:54 AM GMT
Report

நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு

நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியின் வேட்பாளர் ஹெகானி ஜகாலு வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் (BJP),(NDPP) கட்சியின் வேட்பாளரான ஹெகானி ஜகாலு, திமாபூரில் 3 தொகுதியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் அசெட்டோ ஜிமோமியை 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து திமாபூரில் 3 தொகுதியில் ஜகாலு கைப்பற்றியுள்ளார். நடைபெற்ற இந்த ஆண்டு நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் ஹெக்கானி ஜகவுலு, சல்ஹவுடுவோ க்ரூஸ், ஹுகாலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மற்றொரு பெண் போட்டியாளரும் NDPP உறுப்பினருமான Salhoutuonuo Kruse, மேற்கு அங்கமி தொகுதியில் முன்னணியில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 3 இடங்களில் வெற்றி பெற்ற என்டிபிபி-பாஜக கூட்டணி, ஏற்கனவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நாகாலாந்தில் ஆட்சியை தக்க வைக்கும் என என்டிடிவி தகவல்கள் தெரிவிக்கின்றன.  

hekani-jakhalu-of-ndpp--nagaland-mla-frist-woman