வயிற்றிலிருந்த 47 கிலோ கட்டி அகற்றம் - பாட்டிக்கு ஆபரேஷன் செய்து மருத்துவர்கள் சாதனை
அகமதாபாத்தில் பாட்டியின் வயிற்றில் இருந்த 47 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 56 வயது பாட்டி ஒருவர் வயிற்றில் கட்டியுடன் கடந்த 18 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்தார். முதலில் சிறியதாக உருவான கட்டி நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்ததாகவும், அது உடல் உறுப்புகளுடன் இணைந்திருந்ததால் அதை அகற்ற முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த ஒரு அறுவைசிகிச்சையின் போது கட்டியை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்டியின் எடை 47 கிலோவாக மாறியது.
இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தலைமை ம்ருத்துவர் சிராக் தேசாய் தலைமையில் 8 டாக்டர்கள் குழுவாக சேர்ந்து பாட்டியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர். அதேசமயம் கட்டியின் வளர்ச்சியால் இவர் உடலில் உள்ள கிட்னி, இதயம், நுரையீரல், கர்ப்பபை எல்லாம் இடம் மாறியதாக தெரிய வந்துள்ளது.