அமெரிக்காவில் கடும் பனிப்புயல்..5 பேர் உயிரிழப்பு - பொதுமக்கள் வீடுகளில் முடக்கம்

United States of America Death
By Thahir Mar 25, 2023 03:25 AM GMT
Report

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் 5 பேர் உயிரிழந்தனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு பெரும்பாலான மாகாணங்களில் பனிப்புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Heavy snow storm in America..

கலிபோர்னியா மாகாணத்தில் அண்மையில் பனிப்புயல் வீசியது.இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்தன.

பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகள் பனியால் மூடப்பட்டது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Heavy snow storm in America..

மரங்கள் சரிந்து விழுந்து விபத்து 

இதனால் பலரும் மருத்துவமனைக்கு செல்ல முடியால் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

இந்த பனிப்புயலால் 700க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இதில் சிக்கி சிலர் காயமடைந்தனர். உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.