தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

TN Weather Regional Meteorological Centre Weather
By Thahir May 26, 2023 11:00 AM GMT
Report

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலம் காரணமாக இன்று (26.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy rains will lash 17 districts

நீலகிரி, கோயம்புத்துார், திருப்பூர்,தேனி,திண்டுக்கல், கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,கடலுார்,அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர்,திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு 

நாளை (27.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்துார்,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்துார்,சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28.05.2023 மற்றும் 30.05.20230; தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை

26.05.2023 மற்றும் 27.05.2023; தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.