தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

heavy rains tamil nadu rains next two days
By Swetha Subash Dec 30, 2021 07:37 AM GMT
Report

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,

டெல்டா மாவட்டங்கள் ,கடலூர் விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,

ஏனைய கடலோர மாவட்டங்கள் அனேக இடங்களில் மிதமான மழையும் ,உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

வருகிற 1ஆம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் , உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

2-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

3-ம் தேதி தென்மாவட்ட தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 3-ம் தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.