அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை - வானிலை மையம் தகவல்

weather forecast pondichery in chennai heavy rainfall weather man warns
By Swetha Subash Dec 31, 2021 10:39 AM GMT
Report

தமிழகத்தில் சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் நேற்று முதல் தொடங்கி கனமழை பெய்துவரும் நிலையில்,

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.

மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.

இதனிடையே, தற்போது சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.