தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை

Chennai
By Fathima Oct 24, 2026 05:05 AM GMT
Report

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆகிய இரண்டு நாட்கள் பல மாவட்டங்களில் பலத்த மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழகம் கேரளா பகுதிகளில் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

இதனால் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் வி.ஆர்.துரை செய்தியாளர்களிடம், தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும், இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்ற போதும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த புயலுக்கு அர்னாப் என பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.