தத்தளிக்கும் 4 மாவட்டங்கள் - வரலாறு காணாத மழை -பொது விடுமுறை அறிவிப்பு..!!

Thoothukudi Kanyakumari Tirunelveli
By Karthick Dec 18, 2023 01:39 AM GMT
Report

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற 4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது.

மழை

வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

heavy-rainfall-in-south-districts

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. தொடர் கனமழையால், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சாலைகள் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதே போல, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசுப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

பொது விடுமுறை அறிவிப்பு

வரலாறு காணாத வகையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக இதுவரை 84 புள்ளி 5 செ.மீ மழை பதிவாகியிருக்கின்றது. அதே போல, திருச்செந்தூர் - 66.9 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் - 60.7 செ.மீ., சாத்தான்குளம் - 44.7 செ.மீ., கோவில்பட்டி - 37.5 செ.மீ. மழை பதிவுயாகியுள்ளது. தொடர் கனமழை காரணமாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்வரத்து 27,848 கனஅடி, 8000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 20 அடி உயர்ந்து 104 அடியை தாண்டியது. இதன் தொடர்ச்சியாக கரையோர பகுதிகளான, அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, ஆரடியூர், கீழ்முகம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.