சென்னையில் கனமழை தொடரும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

Department of Meteorology TN Weather Weather
By Thahir Jun 19, 2023 06:49 AM GMT
Report

சென்னையில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் அதிகளவாக சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், தரமணி, ஆலந்துார் ஆகிய இடங்களில் தலா 14 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கனமழை தொடரும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..! | Heavy Rain Will Continue In Chennai

செம்பரம்பாக்கம் - 13 செ.மீ, அண்ணாபல்கலைக்கழகம் - 10 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம், குன்றத்துார், டிஜிபி அலுவலகம், நுங்கம்பாக்கம் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழை தொடரும்

சென்னை, திருவள்ளூ, காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாள் வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் கனமழைக்கான காரணம் குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருவதாக தெரிவித்தார்.

சென்னையில் கனமழை தொடரும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..! | Heavy Rain Will Continue In Chennai

27 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தை பொறுத்தவரை 73 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறயைாக அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.