அதி கனமழை எச்சரிக்கை; கவனம் - 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு!
26 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை,
நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசர உத்தரவு
மேலும், இன்று முதல் வரும் 19 வரை இம்மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி; 19ல் தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, கனமழையால் அவசர நிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராக இருக்க வேண்டும்.
விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், உடனே தெரியப்படுத்த வேண்டும் என, அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.