நாளை முதல் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil nadu Department of Meteorology Weather
By Vinoja May 03, 2026 02:48 PM GMT
Report

தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக, மே 4 முதல் மே 9, 2026 வரை அடுத்த 6 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோடையின் உச்சமாக கத்திரி வெயில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று வேலூரில் அதிகபட்சமாக 41.8° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல், குறைந்தபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 21.1° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.அதேபோல் மலைப் பகுதிகளில் கொடைக்கானல்: 9.7° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாளை முதல் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் | Heavy Rain Warning In Tamil Nadu Until The 9Th   

இந்நிலையில், தமிழகத்தில் கன மழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறநாளை (4ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் | Heavy Rain Warning In Tamil Nadu Until The 9Th

5ஆம் திகதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

6ஆம் திகதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

7ஆம் திகதி  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

8ஆம் திகதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் | Heavy Rain Warning In Tamil Nadu Until The 9Th

9ஆம் திகதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.