அடுத்த 5 நாட்களுக்கு மிரட்ட போகும் மழை - வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு!
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
15.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.