அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை - எச்சரிக்கை!

TN Weather Weather
By Sumathi Mar 17, 2023 12:32 PM GMT
Report

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை மழை

கோடைகாலம் தொடங்கிய முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, கோடை மழையை எதிர்பார்த்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை - எச்சரிக்கை! | Heavy Rain Warning For Next 3 Days In Tamilnadu

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று (மார்ச் 17) காலை குளிர்ந்த வானிலை நிலவியது. அடுத்த சில மணி நேரங்களில் ,மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை தரமணி,வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

லேட்டஸ்ட் அப்டேட்

தென் இந்திய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழை தொடரும். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் . அதிகபட்ச வெப்ப நிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதனையடுத்து, ஆந்திர கடலோரபகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.