நாளை தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

By Thahir Dec 02, 2022 05:51 AM GMT
Report

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை கனமழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் வலுவிழந்தது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர் பருவமழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து தமிழகத்தில் மழையின் தீவிரமும் சற்று குறைந்தது.

இதையடுத்து வரும் டிசம்பர் 5ம் தேதி அன்று அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Heavy rain to fall in Tamil Nadu tomorrow

இதனால் தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறபட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.