கனமழை காரணமாக 11 மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

College Schools Heavy Leave Rain
By Thahir Nov 17, 2021 07:08 PM GMT
Report

தமிழகத்தில் கனமழை காரணமாக இதுவரை 11 மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது.

அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை நாளை (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

அதே நேரம் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி நாளை காஞ்சிபுரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.