தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் மிக கன மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்தில்
ராமநாதபுரம்,துாத்துக்குடி,நாகை,மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலும் கன மழை முதல் மிக கன மழை பெய்யும்.
விருதுநகர்,மதுரை,சிவகங்கை,புதுக்கோட்டை,கடலுார்,திருச்சி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் இடி மின்னலும் கூடிய மிதமான மழை பெய்யக்கூடம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு மற்றும் இலங்கை கடற்பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் வரும் 30 மற்றும் 31ஆம் தேதி மன்னர் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.