கனமழையால் தத்தளிக்கும் சீர்காழி - முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு
கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சீர்காழி, கடலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தத்தளிக்கும் சீர்காழி
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் மிக அதிக கனமழையால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சூரைக்காடு, திருமுல்லைவாசல், மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்ததால், சீர்காழியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.
முதலமைச்சர் நாளை ஆய்வு
இந்நிலையில் சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக இன்று இரவு அவர் சீழ்காழி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.