கன மழை எதிரொலி 4 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக சில மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மழை காரணமாக விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை IBC Tamil