கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?
tngovernment
heavyrain
By Petchi Avudaiappan
தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை 12 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது.
இதனிடையே கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.