தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை - துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
இதனையடுத்து, சென்னை, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.