கனமழை எதிரொலி..நெல்லைக்கு ரெட் அலார்ட் - கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
கன மழை எச்சரிக்கை எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலார்ட்
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இந்த 3 மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானமிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
இந்நிலையில், நெல்லைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து மக்களுக்கு கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டால் 1070 மற்றும் 0462-501012 எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.