அதி கனமழை எதிரொலி..மக்கள் 2 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அதில், அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் குடிநீர், உணவு, பால் மற்றும் காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.