மிரட்டும் கனமழை.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா ?
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . அதன்படி தொடர் கனமழை காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல தஞ்சை மயிலாடுதுறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது நாகை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது
தொடங்கிய பருவ மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது எடுத்து கடலோரப் பகுதிகளிலும் இலங்கையின் வடக்கு பகுதியில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அவதி
இந்த நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று லேசான கொஞ்சம் மிக கனமழை பெய்தது மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில் சுமார் ஐந்து முப்பது மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது .
இடைவிடாமல் பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது இதனால் அலுவலகத்தை விட்டு திரும்பும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டனர் .
பள்ளிகளுக்கு விடுமுறை
குறிப்பாக சென்னையில் ஒரு மணி நேரத்தில் நான்கு சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நுங்கம்பாக்கத்தில் நேற்று ஆறு சென்டிமீட்டர் பதிவாகி இருந்தது
இந்த நிலையில் தஞ்சை, திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.