சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை - பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Chennai
By Thahir Nov 01, 2022 03:49 AM GMT
Report

கடந்த 29ம் தேதி தொடங்கியது வடகிழக்கு பருவமழை. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

தொடரும் கனமழை 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.

சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்