ஒஹோ மேகம் வந்ததோ..13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Chennai TN Weather
By Swetha Oct 10, 2024 11:30 AM GMT
Report

13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஒஹோ மேகம் வந்ததோ..13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Heavy Rain In Those 13 Districts Tamil Nadu

குறிப்பாக சென்னை உள்பட சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,

தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஆய்வு மையம்

மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒஹோ மேகம் வந்ததோ..13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Heavy Rain In Those 13 Districts Tamil Nadu

இதனால் மேற்கண்ட 13 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.