தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Tamil nadu Chennai
By Thahir Jun 28, 2022 09:15 AM GMT
Report

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கன மழை எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.