தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
அந்தவகையில், இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.
மேலும், சென்னையைப் பொருத்தவரை இன்று 100°Fக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |