குமரியில் விடிய விடிய பெய்த மழை... வீடுகளை சூழ்ந்த வெள்ளம்... சாலைகள் துண்டிப்பு...
கன்னியாகுமரியில்விடிய விடிய பெய்துவரும் கனமழையால் அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால் வீடுகள் ,விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
கன்னியாகுமரிமாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள யாஸ் புயலின் எதிரொலியால் நேற்று முதல் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை,பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு 20000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் அணையில் நீர்மட்டம் 45 அடியை எட்டியது.
இதைனையடுத்து அணையிலிருந்து 11, 700 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பேச்சிப்பாறை அருகே மணியங்குழி பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு சாலைகள் தண்ணீரால் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.