சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
By Fathima
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மயிலாப்பூர், கோயம்பேடு, அண்ணா நகர், மதுரவாயல், அமைந்தகரை, பெரம்பூர், வளசரவாக்கம், வில்லிவாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், செங்குன்றம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.