8 மணி நேர கனமழை - மொத்தமாக முடங்கிய சென்னை
சென்னையில் இன்று 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று பிற்பகல் முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
மழைநீர் தேங்கியதால் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கிண்டி, வடபழனி, எழும்பூர், ஆயிரம் விளக்குமயிலாப்பூர் ஆர்கே சாலை ராயப்பேட்டை என சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நகராமல் அப்படியே அணிவகுத்து நிற்பதால் போலீசார், போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுரங்கபாதை மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.